பின்பற்றுபவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2017

நான் கொல்லவில்லை.

வாக்குமூலம்.

நண்பர்களே,

சமீபத்தில் ஊரெங்கும் , குறிப்பாக நம் தமிழகத்து பட்டி தொட்டியெங்கும், இதே பேச்சு.

யார்? என்ன? எப்போது? எங்கே? எப்படி? என்றெல்லாம் யோசிக்காமல், அவர் கொன்றுவிட்டார், இவர் கொன்றுவிட்டார்,அவர்கள் கொன்றுவிட்டார்கள்   நீங்க கொன்றுவிட்டீர்கள்   இவர்கள்  கொன்றுவிட்டார்கள் போன்ற வாய்ப்பேச்சுகளும் எழுத்துவடிவ செய்திகளும் தலை காட்டுவதை கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.

மற்ற மாநிலங்களிலோ, மற்ற நாடுகளிலோ இந்த பேச்சு அவ்வளவாக இல்லாதபோது நம் தமிழகத்தில் மட்டும் இந்த பேச்சு தொடர்ந்து உலா வருகின்ற சமயத்தில், சமீபத்தில் இங்கிலாந்திலும் இந்த பேச்சு அடி பட்டது.

சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பை சார்ந்த அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அழகாகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பல்-கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக  பட்டிமன்றம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்டி மன்றம் என்பது தற்காலத்து பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாகிப்போனதை யாராலும் அங்கீகரிக்காமல் இருக்க முடியாது.

விழாக்களின்போது, புத்தாடை, இனிப்பு, விருந்து எப்படி முக்கிய பங்கு வகிக்கின்றனவோ , அதற்கு சற்றும் குறைவின்றி பங்குவகிக்கும் ஒரு நிகழ்ச்சி பட்டி மன்றம் என்றால் அது மிகை அல்ல.

பட்டிமன்ற தலைப்பு: " நம்  தமிழ் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோமா அல்லது தோல்வி அடைந்திருக்கின்றோமா?"

இரண்டு அணிகளிலும் தலா இரண்டுபேர்கள் பேசினார்கள்.

அவர்களின் பேச்சுக்கு முன் பட்டிமன்ற நடுவர் தலைப்பை குறித்து பேசிவிட்டு பொங்கலின் அடிப்படை நோக்கமே,"நன்றி" என்பதுதான்.

உழவன் தமது உழைப்பை மட்டுமே மூலதனமாக கருதாமல் பயிர்  வளர்ந்து செழித்து பலன் கொடுப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கும் சூரியனுக்கும் தன் உழவிற்கு பெரும் துணையாக இருக்கும் கால் நடைகளுக்கும் நன்றி செலுத்துகின்றான், ஆனால் உலகிற்கே உணவளித்து பசிப்பிணி நீக்கும் உழவனுக்கு யார் நன்றி செலுத்துவது.

உழவனுக்கு நன்றி செலுத்துவது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமை அல்லவா?

மகிழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் இந்த கொண்டாட்டங்களுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என நினைத்து பார்த்தால் இல்லை என்ற எதார்த்தம் பதிலாக கிடைகின்றது.

விதவிதமான  உணவினை நாம் உண்டு மகிழ காரணமான உழவன் இன்று எலிக்கறியேனும் கிடைக்காதா என ஏங்கி தவிக்கும் பரிதாபமான சூழலில் சிக்கி இருக்கின்றன.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரையும் விஞ்சும் வகையில் வாடிய  பயிரை கண்டு உயிர் நீத்த எத்தனையோ விவசாயிகளின் குடும்பங்களுக்கு யார் ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கமுடியும்?

இத்தகைய சூழ்நிலையில் நன்றியின் நன் நாளை கொண்டாடும் நாம் அந்த உயிர் நீத்த விவசாயிகளுக்கு நமது அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்து மக்களுக்கு ஆறுதலையும் அனுதாபங்களை தெரிவிக்கும் பொருட்டு , நாம் அனைவரும் மெளனமாக ஒரு நிமிடம் எழுந்து நிற்போமேயானால்  இந்த நன்றியின்  நன் நாளில்  இதுவே நாம் நம் விவசாயிகளுக்கு செலுத்தும் மகத்தான நன்றியாக அமையும்.

இப்படி அவர் சொன்னதும் குழுமி இருந்த குழந்தைகள் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

பின்னர் பட்டி மன்றம் துவங்கியது வாதங்கள் தொடர்ந்தன, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

விவசாயிகளை குறித்த நடுவரின் உருக்கமான பேச்சும் இரக்கமான பேச்சும் கூடி இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து அந்த கூட்டத்தில் இருந்த பலரும் அந்த பட்டிமன்ற நடுவரிடம் வந்து சொன்ன வார்த்தைகள்தான் , "கொன்னுட்டீங்க.. இதுவரை எந்த பட்டி மன்றத்திலும் இப்படி ஒரு மௌன அஞ்சலி செலுத்தி நாங்கள் பார்க்கவில்லை  இது முற்றிலும் பாராட்டுக்குரியது".

அதை கேட்டு  பதறிப்போன நடுவர் சொன்ன பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.

பிறகு தான் புரிந்ததாம்., "கொன்னுட்டீங்க" என்றால்... பாராட்டும்படி  நன்றாக நடத்தினீர்கள் என்று பொருளாம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


12 கருத்துகள்:

  1. பதிவை போட்டு நீங்களும் கொன்னுட்டீங்க

    பதிலளிநீக்கு
  2. கொன்னுட்டீங்க" என்றால்... பாராட்டும்படி நன்றாக நடத்தினீர்கள் என்று பொருளாம்.///
    ஐய்யோ! தமிழின் நிலமை பரிதாபம்.

    நிச்சையம் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு வரும் அப்போது உலகமே விவசாயிகள் பக்கம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. தமிழும் உழவர்களை போல் பரிதாப நிலை...?!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அரசே,

    கொன்னது யாரு நீங்கள் தானே,,,

    கொன்னுட்டீங்க போங்க,, பதிவில் தான்,,

    பதிலளிநீக்கு
  5. ஆம்! கொன்னுட்டீங்க என்பதைப் பார்த்தது பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடந்தது என்பதைத்தான் பாராட்டிச் சொல்லுகிறார்கள் என்பது புரிந்துவிட்டது கோ.

    இங்கெல்லாம் எங்கள் மொழி அதான் இளைஞர் மொழி...அதானே...பாத்தீங்களா சைக்கிள் காப்ல நாங்களும் இளைஞர் னு சொல்லிக்கிறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை புரிந்ததற்கும் விளக்கம் சொன்னதற்கும் மிக்க நன்றிகள்.

      வாழ்க தமிழ்.

      கோ

      நீக்கு