Followers

Thursday, November 10, 2016

அஞ்சிக்கும் பத்துக்கும்

காசிருந்தால் வாங்கலா(ம்)மா??

நண்பர்களே,

சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக  பழைய  500  மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில்  பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும்  சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.

ஒரு காலத்தில் ஐந்திற்கும்  பத்துக்கும் அல்லாடினோம் என்று சொல்லிவந்த ஏழை எளிய மக்கள்கூட இப்போது 500,  1000  என தங்கள் கைகளில் புழங்கும்படி வாழ்ந்து வந்தது மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சியாகவே கருதப்பட்டது.

இந்த வகையில் 500  ரூபாய் நோட்டுகளையோ 1000  ரூபாய் நோட்டுகளையோ மட்டுமே எங்கும் சுமந்து புழங்கிக்கொண்டு வாழ்ந்துவந்த பெரும் பணக்காரர்கள்கூட இப்போது அந்த பெருமதிப்பு ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு அவற்றை வங்கியில் செலுத்தவும் , அவற்றை எப்படியாவது மாற்றிக்கொள்ளவும் துடிக்கும் துடிப்புகளை பார்க்கும்போது கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

இந்த நிலையை பார்க்கும்போது பல வருடங்களுக்கு முன் சோவியத் ரஷியாவில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார, புரட்சி, பிளவு போன்ற  சூழ்நிலையின்போது மக்கள் வைத்திருந்த ரூபிள் என்னும் பெருவாரியான ருபாய் நோட்டுக்கள் பயனற்றதாய், மதிப்பிழந்தவைகளாக அறிவிக்கப்பட்ட சூழ் நிலையில் அந்த ரூபாய் நோட்டுகள் , வண்ணங்களாலும் ஒவியங்களாலும் அச்சடிக்கப்பட்ட வெறும் காகிதங்களாகவே கருதப்பட்டன.

இன்னும் சிலர் அவை தங்களின் கழிவறை  உபயோகத்திற்கு கூட பயன்படாத காகிதங்களாகவே கருதினர் என்பது செய்தி.

ஒரே இரவுக்குள் ஏற்பட்ட பீதியும் அச்சமும், சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மதிப்பிழந்து வெறும் காகிதங்களாக ஆகிவிடுமோ என்ற பெருவாரியான மக்களின் அச்சத்தை தீர்க்கும்பொருட்டு ஊடகங்கள் விளக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருப்பது போதாது என்றே தோன்றுகின்றது.

முன்பெல்லாம் திருமணத்திற்கு செல்பவர்கள் மொய் பணமாக 51,101  என கொடுப்பது கவுரவமாக கருதப்பட்ட நம் கலாச்சாரத்தில் கடந்த இரண்டு தினங்களில் நடந்த திருமண மொய்  பணமாக 500, 1௦௦௦ என கொடுப்பது திருமண வீட்டாரை சங்கடத்திற்குள்ளாக்குவதாக ஒரு சில திருமண வீட்டினர் சொல்வதை கேட்கும்போதும் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

வெளியூர் பயணிகள் தங்கள் உணவு தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதபடி உணவு விடுதிகள் இந்த பணங்களை வாங்க மறுப்பதும் வேதனைக்குரியது.

எத்தனை லட்சமாக இருந்தாலும் அவற்றை தங்களின் வாங்கி கணக்கில் இன்னும் சில நாட்களுக்கு செலுத்தி அவற்றை வரவு வைத்துக்கொள்ளமுடியும் என்ற உத்திரவாதத்தின்மீது நம்பிக்கை இழந்தவர்களாக வியாபாரிகள் நடந்துகொள்வதும்  மிகுந்த வேதனை அளிக்கின்றது.

இந்த நிலையில் ஒரு சில மனித நேயமுள்ள சிற்றுண்டி உரிமையாளர்கள் பசி என்று வரும் வெளியூர் பயணிகளுக்கும் உள்ளூர் வாசிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் செய்தி மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றது.

பதற்றம் இன்றி நிதானமாக அதே சமயத்தில் காலக்கெடுவிற்கு முன்னர் தங்களிடம் இருக்கும் இந்த நோட்டுக்களை தத்தம் வாங்கி கணக்கில் இட்டு வரவு வைத்துக்கொண்டு , தேவையானால் உடனடியாக ஏ டீ எம் மூலம்  நிர்ணயிக்கப்பட்ட அளவில் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

வியாபாரிகளும்  வாடிக்கையாளர்களின் நலனை கருதி கொஞ்சம் கருணையின் அடிப்படியில் கடன் வசதிகளை தற்காலிகமாக செய்துகொடுத்து மனித நேயத்தை நிலை நிறுத்தவேண்டும்.

இத்தகைய சூழ்நிலை, முடிவுதெரியாத போர்காலமோ அல்லது  உலக யுத்தமோ அல்ல தேவைக்கு அதிகமாக சேர்த்துவைத்துக்கொள்ள.

இது ஒரு தற்காலிக சூழ் நிலைதான் என்பதை உணர்ந்து  பதற்றப்படாமல், தேவைக்கு மட்டுமே பொருட்களை வாங்கி புழங்குவது எல்லோரும் பயன்பெற வழி வகுக்கும்.

நண்பர்களே, பதற்றப்படாமல்,   கடினமாக உழைத்து  சம்பாதித்த உங்கள் பணத்தில் ஒரு பைசா கூட வீணாக போகாமல் அவற்றை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதோடு, இதுகுறித்து தெளிவான விளக்கம் புரியாமல் தடுமாறும் பாமர மக்களுக்கும் அவர்களது பணம் வீணாகாமல், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யுங்கள்.

இன்னும்கூட நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் குறித்த அறிவும் இல்லாமல்கூட ஒருசிலர் இருக்கக்கூடும் அவர்களுக்கும் உதவுங்கள். 

உங்க கவலை உங்களுக்கு என் கவலை எனக்கு.

நீங்களாவது உள்ளூரில் வங்கிகளிலேயோ, தபால் நிலையத்திலேயே செலுத்தி உங்கள் கணக்கில் வரவு வைத்து பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் கடந்த முறை ஊரில் இருந்து திரும்பும்போது இந்திய பொருளாதார வளர்ச்சி கருதியும் அதன் ஸ்திரத்தன்மைக்கு  உதவவேண்டும் என கருதியும் முடிந்தவரை  விமான நிலையத்தில் இருந்த  இந்திய ரூபாய்களையும் செலவு செய்தபிறகும், செலவுபோக மீதமிருக்கும் ஒரு ஐநூறையும் ஒரு ஆயிரத்தையும் இங்கே வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் , அவற்றை மாற்றவேண்டுமாயின் சுமார் 5௦,௦௦௦ ரூபாய் செலவுசெய்து இந்தியா வரவேண்டி இருக்கும். 

போச்சி எல்லாம் போச்சி.

அடுத்தமுறை இந்தியா வந்தவுடன் என்னிடம் இருக்கும் இந்த தாள்களை லேமினேட் செய்து வீட்டில் மாட்டி வைக்கமுடியுமா என பார்ப்போம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 comments:

 1. எதற்கும் மறுபடியும் முன்னெச்சரிக்கையோடு இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா அவர்களுக்கு , வணக்கம்.

   தாங்கள் சொல்லுவதை பார்த்தால் இன்னும் என்னென்னவெல்லாமோ நடக்கும்போல் தெரிகிறது.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 2. Replies
  1. தனப்பால்,

   ஆமாம் இந்த ஒண்ணா வச்சிக்கினே நான் படர அவஸ்தை.. அய்யய்யய்யோ.... .

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 3. already jewel shops owners list are compiled...
  in major cities and in towns even jewel sales had taken place till early morning...

  ReplyDelete
  Replies
  1. Hello Nat Chander,

   Yes I heard of it.

   Thanks for your visit and comment.

   ko

   Delete
 4. when one of our family members get admitted in an emergency ward we never complain about food water shelter chronic difficulties .... the present situation is similar to an emergency...
  let us cross this period...ji

  ReplyDelete
  Replies
  1. Hello Nat Chander,

   This has created a panic amongst the public and they were left with improper and incomplete information and advise.

   I too hope that this situation is just for a short while only and get crossed soon.

   Thanks for your visit and comment.

   ko

   Delete