பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

அத்திக்காய் காய்! காய்!!

எனக்காய்!!!.

நண்பர்களே,

பொதுவாக உலகில் மனிதர்கள்சாப்பிடக்கூடிய அத்தனை காய்கறிகளும், பாகற்காய் உட்பட, எனக்கு பிடிக்கும் என்றாலும்   எனக்கு மிக மிக பிடித்தவை இரண்டு.

ஒன்று வெண்டைக்காய் மற்றொன்று  கத்தரிக்காய்.

இந்த இரண்டையும் வறுவலாக, வத்தலாக, பொரியலாக, கூட்டாக , குழம்பாக என்று எத்தனையோ வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.

இவற்றில் வெண்டைக்காய் உலகின் எல்லா நாடுகளிலும் கிடைக்கிறதா என தெரியவில்லை ஆனால் கத்தரிக்காய் பரவலாக எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன.

Image result for images of aubergine

பல வடிவத்தில் பல நிறங்களில் கிடைக்கும்  இந்த கத்தரிக்காய்களுக்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றுள் ஆபர்ஜீன் எனும் பெயர் எல்லா நாடுகளிலும்- ஊர்களிலும் பிரசித்தம்.

ஏற்கனவே சொன்னதுபோல், இவற்றை எத்தைன ரூபங்களிலும் செய்து சாப்பிட்டாலும் கத்தரிக்காயில் செய்யப்படும் பஜ்ஜி யின் சுவை அலாதிதான்.

கடந்த சில பதிவுகளில் குறிப்பிட்டதுபோல்  இத்தாலியின்  வெனிஸ் நகரத்தின் அழகை பார்த்தவண்ணம் ஒரு தேநீர்(??) கடைக்குள் சென்றேன்.  அங்கே விதவிதமான நொறுக்கு தீனிகள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் என்னையும்  என் கண்ணையும் கவர்ந்த ஒரு உணவுப் பொருளின் தோற்றம் , அதை எங்கேயோ பார்த்திருக்கின்றோம் என்பதுபோல் தோன்றியது.

ஆவல் மிகுதியால் அது என்ன என்று கேட்டேன்,நான் ஆங்கிலத்தில் கேட்டதால் எனக்கு புரியும் படிக்கு , அவர்களும் ஆங்கிலத்த்தில் பதிலளித்தார்கள். 

அதன் அர்த்தம் , "இது கத்திரிக்காய் பஜ்ஜி" (இத்தாலி மொழியில் கத்தரிக்காய்க்கு  Melanzana )

என்னது கத்தரிக்காய் பஜ்ஜியா ?

உடனே என் கண்கள்  அங்கே பணிபுரியும் நபர்களை நோட்டம் விட்டான, யாரேனும் நம்ம ஊர் ஆள் அங்கே வேலை செய்கின்றாரோ என்று.

ஆனால் அப்படி இங்கே நம்ம ஊர் ஆட்கள் யாருமே இல்லை. அது ஒரு முழுக்க முழுக்க இத்தாலியர்களால் நடத்தப்படும் ஒரு தேநீர்கடை.

சரி ஒரு பிளேட் கொடுங்கள் என்றேன்.

ஒரு பிளேட்டுக்கு நான்கு பஜ்ஜிகள் என்று சொல்லி கொடுத்தார்கள்.

நம்ம ஊர்போல சூடா எண்ணையில் இருந்து எடுத்து கொடுக்க அதை அப்படியே ஒரு கிழிந்துபோன செய்தித்தாளில் வைத்து மடித்து எண்ணையை பிழிந்து வாயில் போட்டு ருசித்த நினைவுகளுடன் இருக்க, இப்போது அந்த நான்கு பஜ்ஜிகளையும் ஒரு தட்டில் வைத்து  மைக்கிரோ அவனில்  சூடு படுத்தி கொடுத்தனர்.

Image result for images of aubergine bhaji

நம்ம ஊர் பஜ்ஜிக்கும் இந்த பஜ்ஜிக்கும் தோற்றத்தில் மாற்றம் இல்லை என்றாலும் சுவையில் வித்தியாசம் இருந்தது.

சரி நாலு பஜ்ஜியின் விலை என்ன?

நம்ம ஊர் கணக்குப்படி 500 ரூபாய், நம்ம  ஊர் சந்தையில்  ஒரு மூட்டையையே   வாங்கலாமோ?

எத்திக்கு சென்றாலும் நம் திக்கிற்கே உரித்தான பாரம்பரிய உணவை சுவைப்பதுவே ஆனந்தம்.

எப்படியோ வெனிசுக்கு  போய்க்கூட  நம்ம ஐட்டத்தை  - நம்மவூர் பஜ்ஜியை ருசிக்க முடிந்ததே என்ற மகிழ்ச்சியில் அடுத்தநாள் வெனிஸில் இருந்து  280 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள  வேறு  ஒரு நகருக்கு  பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டி இருந்ததால் இருப்பிடம் திரும்பினேன்.

எந்த ஊர் என்ன விசேஷம்  என்பதை பிறகு சொல்கிறேன், அதுவரை நம்ம ஊர் தேநீர்கடையில் மிளகாய் பஜ்ஜி கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

5 கருத்துகள்:

  1. அட வெனிஸ் நகரில் கத்தரிக்காய் பஜ்ஜி! விலை தான் கொஞ்சம் அதிகம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வெளி நாடுகளில் எல்லாமே நம்ம ஊர் கணக்கிற்கு பல மடங்கு அதிகம்தான். நீங்க, ஜுலை 29 2015 தேதி இட்ட எனது "தங்கமே வைரமே" பதிவை வாசிக்க வில்லையா?

      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.

      கோ

      நீக்கு
  2. வெங்கட்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. வெனிஸ் நகரில் கத்தரிக்காய் பஜ்ஜி!!! சரி அது எப்படி இருந்தது என்று சொல்லவே இல்லையே....நிச்சயமாகக் கடலைமாவு போட்டு செய்திருக்க மாட்டார்கள். சோள மாவு? அதில் இத்தாலியன்/அவங்க ஊர் ஸ்பைஸஸ் போட்டு செய்திருந்தார்களா? அதையும் சொல்லியிருக்கலாமே!!!

    பதிலளிநீக்கு
  4. நண்பர்களே,

    கடலை தாண்டி போனேன் என்பதற்காக கடலை மாவு பஜ்ஜியையா செய்து தருவார்கள்?, எல்லாம் மைதாவும் சோளமும்தான் , இருந்தாலும் ஒரு வித்தியாசமான வாசனை , சுவையோடுதான் இருந்தது.

    உங்களுக்கும் ரெண்டு பார்சல் கட்ட சொன்னேன் ஆனால் , நேரில் வருவோருக்குத்தான் கொடுப்பார்களாம்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு