Followers

Thursday, March 3, 2016

அந்த சிலமணி நேரம் ??!! -- 4

டிரைவரின் டைரி குறிப்பு.!!


நண்பர்களே,

முன் பதிவை படிக்க ...அந்த சிலமணி நேரம் ??!! --3

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த பிரேத பரிசோதனையின் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பல மர்ம முடிச்சிகள் கட்டவிழ்க்கபட்டன.

அவற்றுள்:

1.  இறந்தவரின் மரணம் இயற்கையானதுதான்.

2. இறந்தவர், காருக்கு சொந்தமான நிறுவனத்தில் (Funeral directorate) 30 ஆண்டுகள் பணி புரிந்த ஓட்டுனர்.

3. கார் நிறுத்தபட்டிருந்த இடம் ஒரு கல்லறை தோட்டம்.

4. காரின் முன் பகுதி தொட்டுகொண்டிருந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்  அடக்கம் செய்யப்பட்ட தன் தந்தையாரின் பெயர் பொறிக்கப்பட்ட தலை கல்.

5.இவருக்கு மனைவி குடும்பம் என்று யாரும் இல்லை.

6.இவர் நேற்று மாலை தன் பணியை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குள் சென்றவர் அதன் பிறகு வெளியில் வரவில்லை - இது அக்கம் பக்கத்து வீட்டாரின் சாட்சி.

இதெல்லாம் சரி, ஆனால் ஒரு  முக்கிய கேள்விகளுக்கான பதில் மட்டும் , இந்த நாடு இதுவரை கண்டும் கேட்டும் அறியாத பதிலாக இருந்தது.

நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமராக்களில் பதிவான படங்களை மீண்டும் மீண்டும் சோதித்து பார்த்தபோது, அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் யாரும் இல்லாதது கண்டுபிடிக்கபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாலும், சரியாக தனது தந்தையை அடக்கம் செய்யபட்டிருந்த கல்லறை இருந்த  பல மைல் தொலைவிலுள்ள கல்லறை தோட்டத்தில், சரியாக தன் தந்தை அடக்கம் செய்யபட்டிருந்த இடத்தில் கார் நிறுத்த பட்டிருந்ததையும், நிறுத்தப்பட்ட காரிலிருந்து யாரும் இறங்கவில்லை என்பதை கல்லறை தோட்டத்து காமிரா பதிவுகள் ஊர்ஜிதபடுத்தியதாலும், காவலர்களும், கை ரேகை நிபுணர்களும் ,மோப்ப நாய்களும் , தடயவியல் அறிஞர்களும் யாரையும் சந்தேகிக்க சிறிதும் முகாந்தரமில்லாத சூழ் நிலை ஏற்பட்டதினாலும் பிரேத பரிசோதனை துரித கதியில் முடக்கி விடப்பட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் கிடைக்கப்பட்ட பிரேத பரிசோதனையும் இவரின் மரணம் இயற்கை எனவும், வேறு மனிதர்களின் ரேகைகளோ, அல்லது விஷம் போன்ற எந்த பொருளும் அவர் உடலில் இல்லை எனவும், தீர்க்கமான முடிவை அறிவித்திருந்தது.

இந்த நிகழ்வின் பின்னணியையும் மர்மத்தையும்,நாடே பெரும் ஆர்வத்துடனும் , பரபரப்புடனும் எதிர்பார்த்திருந்த வேளையில்   புலன் விசாரணை அதிகாரிகளால்  இறந்தவரின் வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட அவரது டைரியின் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தது ஒட்டுமொத்த காவல்துறை.

அப்படி என்ன இருந்தது அந்த டைரி குறிப்பில்?

நாளை சொல்கிறேன்

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
  


9 comments:

 1. வணக்கம்,
  ஆச்சிரியம் தான், டைரியின் குறிப்புகள் என்ன சொன்னது, நாளை சொல்லுங்கள்,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியரின் வருகைக்கு மிக்க நன்றி. சொல்கிறேன் டைரி குறிப்பை விரைவில்

   Delete
 2. எங்கே என் பின்னூட்டம் காணவில்லை, இதற்கும் புலன் விசாரணை வைக்கனும்,,

  ReplyDelete
  Replies
  1. சரியாய் பாருங்கள், இருக்குமே.

   Delete
  2. ஒஒஒ இதுவும் ஆவியின் வேலை தானோ,,, கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்குமோ,,, எப்படியோ இருக்குப்பா,,

   Delete
 3. ஆஹா இன்னும் சஸ்பென்ஸ் !!! சீக்கிரம் பதிவிடுங்கள்...மண்டை வெடித்துவிடும் தெரிந்துகொள்ளவில்லை என்றால்..

  ReplyDelete
  Replies
  1. மண்டை வெடித்துவிடுமளவிற்கு காக்கவைக்க மாட்டேன், ஏனென்றால் உங்கள் "மண்டை" எங்களுக்கு கொடுத்துவருவது அருமை சிந்தனை மலர் "செண்டை".

   Delete
 4. அப்படி என்னதான் நடக்குதுப்பா அங்க..அந்த நாட்டிலும் இந்த எக்சார்சிஸ்ட்/பேய் நம்பிக்கை எல்லாம் உண்டே. சரி காரின் நம்பர் என்னவோ 13???

  ReplyDelete
  Replies
  1. அஸ்க்கு புஸ்க்கு அதெல்லாம் சொல்லமாட்டோம், பொறுத்திருந்து பாருங்கள்.

   Delete