Followers

Thursday, November 26, 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 3

மெய்பொருள் காண்பது அறிவு!

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு -  சொடுக்குங்கள்

அவையில் கூடி இருக்கும் அன்பிற்கினிய  தம்பி தங்கைகளே, உங்களோடு மூன்று செய்திகளை கூறி விடைபெறலாம் என நினைக்கின்றேன், அவற்றுள் முதன்மையானதும் நான் மிக முக்கியமானதாக கருதுவதும் " தேசபற்று".

வெளி நாட்டில் வாழும் இவருக்கு தேசபற்று குறித்து பேச என்ன தகுதி இருக்கின்றது என்று ஒரு சிலர் கருதக்கூடும்.

வெளி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும், ங்கிருப்பவர்களைவிட எள்ளின் முனையளவேனும் தேசபற்று அதிகம் என்று நான் சொன்னால் அது எள்ளின் முனையளவும் மிகை அல்ல என்று நினைக்கின்றேன்.

தாயின் மீது பற்றும் பாசமும் அன்பும் மரியாதையும், தாயுடனே இருக்கும் குழந்தையைவிட தாயை விட்டு பிறிந்திருக்கும் குழந்தைகளுக்கே அதிகம்,

ஒவ்வொரு முறை தொலைகாட்சிகளில் நம் தேசத்து செய்திகளும் தலைவர்களின் முகங்களும் தேசிய கொடியையும் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஆர்வமும் பல முறை எல்லை மீறியவையாகவே இருக்கும் என்றால் அதுவும் மிகை அல்ல.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் அணிவகுத்து செல்லும் காட்ச்சியின்போதும், அவர்கள் தனிப்பட்டமுறையில் எங்களுக்கு அறிமுகமோ பரீச்சியமோ இல்லாமல் இருந்தாலும், ஏதோ ரத்த சம்பத்தமான நெருங்கிய உறவுகளை பார்க்கும் உணர்வு ஏற்படுமே அதை எப்படி வார்த்தைகளால் வார்த்தெடுப்பது?

அதே விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கம்  பெறும்போது உயர் கம்ப உச்சியிலே பட்டொளி வீசி பறக்கும் நம் மூவண்ண கொடியையும் அதன் பின்னணியில் இசையோடு முழங்கும் தேசிய கீதத்தை கேட்க நேரும்போதெல்லாம் குடும்பமாக எழுந்து  அந்த பாடல் முடியும் வரை அசையாமல் நிற்கின்றோமே இதை தேச பக்தி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?

அதேபோல நாட்டில் ஏற்படும் பேரிடர் நேரங்களில் தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோல பதறிபோவதும் , உரியவர்களுக்கு போய் சேருமா சேராதா என்று கூட யோசிக்காமல், துயர் துடைப்பு பணிகளுக்கென்று முடிந்ததை சேகரித்து அனுப்புவதால் மட்டுமல்ல , உலகில் யாருக்கு எங்கே உதவிகள் தேவை படும்போதெல்லாம்  முதலில் உதவிகரம் நீட்டுகிறோம் என்பதையும் தாண்டி  , ஒவ்வொரு நிமிடமும் நிலைமை என்ன என்பதை உன்னிப்பாக கேட்டு சக இந்திய சகோதர சகோதரிகளின் நலனில் வெளி நாட்டு இந்தியர்கள் காட்டும் அக்கறையும் பரிதவிப்பும் அளப்பரியது.

தாய் நாட்டை விட்டு பிரிந்து கால் நூற்றாண்டு நெருங்கும் இந்த தருணம் மட்டுமல்லாது இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும்  இன்னமும் " இந்தியன்" என்று சொல்லிகொள்வதில்தான் நான் பெருமை படுகிறேன்.

கடவு சீட்டுகளும் ,  அரசு ஆவணங்களிலும்  வேண்டுமானால் என் அடையாளம் "வேறாக" இருக்கலாம் ஆனால் என் அடி மனதின் ஆழத்தில் ரத்தம்  பாய்ந்து வளமுடன் இறுக பற்றியிருக்கும் "வேராக" இருப்பது இந்தியன் எனும் உணர்வு மட்டுமே.

நம் ஒவ்வொருவருக்கும் சாதி, மத , இன, நிற, அரசியல்  வேறுபாடுகளை கடந்து இந்தியன் எனும் உணர்வு கண்டிப்பாக விஞ்சி இருக்க வேண்டும்.

நம் நாட்டை நாம் போற்றவும் வணங்கவும் துதிக்கவும் வேண்டும், எந்த நேரத்திலும் யாருக்காகவும் நம் தேசத்தின் பெருமையை, கௌரவத்தை, பண்பாட்டை, பாரம்பரியத்தை விட்டுகொடுக்ககூடாது எனும் என்ணத்தை நாம் வலுவாக பற்றி கொள்ளவேண்டும்  என்பதை இந்த தருணத்தில் எனது வேண்டுகோளாக உங்களிடத்தில் வைக்க ஆசை படுகிறேன்.

உணர்வு மட்டும் இருந்தால் போதுமா, அவற்றை செயல் வடிவில் காட்டவேண்டாமா?

வெளி நாட்டு ஆடைகளை அணிந்துகொள்கிறோம், வெளி நாட்டு உணவு , பானங்களை அருந்துகிறோம், வெளி நாட்டு மகிழுந்துகளை பயன்படுத்துகிறோம், வெளி நாட்டு விழாக்களை, அவர்களது நாகரீகத்தை ,வெளி நாட்டு மொழியை பேச முனைப்பு காட்டுகின்றோம், அதே சமயத்தில் வெளி நாடுகளில் இருக்கும் வேறு சில நல்ல விஷயங்களை கடைபிடிப்பதில் முனைப்பு காட்டுகின்றோமா?

எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்,  நம் நாட்டுக்கு தேவையான சுகாதாரம், தூய்மை போன்ற விஷயங்களில் எத்தனை முனைப்பு காட்டுகின்றோம்?

இந்தியா என்றாலே, பெரும்பான்மையான வெளி நாட்டவருக்கு முதலில் தோன்றுவது சுகாதாரமின்மையும் கழிவறை வசதிகள்  இன்மையும்தான்.  தொலைகாட்சி ஆவணப்படங்களிலும் இவர்கள் பிரத்தியேகமாக வெளிச்சம் போட்டு காட்டுவது இவைகளைத்தான்  எனும்போது   நாம் கூனி குருகிபோவது மறுக்க முடியாத உண்மை.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்;அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு"

எனும் கூற்றிற்கு இணங்க ,கட்சி பேதமைகளை கடந்து, மொழி வேறுபாடுகளை கடந்து தேசிய நலம் கருதி, நம் அரசு கொண்டுவந்திருக்கும் "தூய்மை இந்தியா "எனும்  ஒரு உயரிய திட்டத்தில் அனைவரும் முனைப்புடன் பங்குபெறும் வண்ணம், நம்மையும் நம்மை சுற்றிலும் தூய்மை நிலவ தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

கண்ட இடத்தில் எச்சில் துப்புவது, குப்பைகளை போடுவது, பொது இடங்களை கழிப்பறைகளாக பயன்படுத்துவது போன்றவற்றை குறைத்தாலே, நாமும் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கு கொள்வதாக அமையுமே.

Charity begins at home  என்பதுபோல நம்மையும், நம்மை சுற்றிலும் தூய்மையாக வைக்க ஆரம்பித்தாலே நாடுமுழுவதிலும்  ஒரு பெரிய மாற்றம் உண்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடரும் .....வரை காத்திருங்கள்.

நன்றி


மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ

8 comments:

 1. // தாயை விட்டு பிரிந்திருக்கும் குழந்தைகளுக்கே அதிகம்... // அருமை... உண்மை...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,
   வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
   கோ

   Delete
 2. கடவு சீட்டுகளும் , அரசு ஆவணங்களிலும் வேண்டுமானால் என் அடையாளம் "வேறாக" இருக்கலாம் ஆனால் என் அடி மனதின் ஆழத்தில் ரத்தம் பாய்ந்து வளமுடன் இறுக பற்றியிருக்கும் "வேராக" இருப்பது இந்தியன் எனும் உணர்வு மட்டுமே.// அருமை...

  Charity begins at home என்பதுபோல நம்மையும், நம்மை சுற்றிலும் தூய்மையாக வைக்க ஆரம்பித்தாலே நாடுமுழுவதிலும் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//

  உண்மைதான். ஆனால், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அந்தக் குப்பைகளை எங்கு கொண்டு கொட்டுவது? தனிவீடுகள் இல்லாதவர்கள்? எரிக்கவும் முடியாத நிலை. குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. ஆனால் அவை ரொம்பி வழிகின்றன. சுற்றிலும் சிதறிக் கிடக்கின்றன. அந்தக் குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யும் கார்ப்பரேஷன் லாரி வருவதில்லையே..இதை முறையிட தொலை பேசி எண்ணை அழைத்தால் அது பாவம் அழுகின்றது..."யாரும் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை...ஏன் என்னை அடிக்கடித் தொந்தரவு செய்து அழ விடுகின்றாய் என்று.."

  எங்கள் கஷ்டம் எங்களுக்கு...ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

   வளரும் இளைய சமூதாயத்தில் நேர்மையான அரசு அதிகாரிகளும் , அமைச்சர்களும் உருவாகாமலா போய்விடும்.

   மனதை தளர விட வேண்டாம். மரம் வைத்தவர் பெரும்பாலும் அதன் பலனை அடைந்ததில்லை, அவை பின் வரும் சந்ததியினருக்கே.

   கோ

   Delete
 3. வணக்கம் அரசே,

  தங்கள் பேச்சு அருமை,,,, கண்டிப்பாக அரை மணிநேரம் அல்ல ஒரு மணி நேரம் பேசினாலும் இது போன்ற உரைகளை மாணவர்கள் நிச்சயம் அமைதியாக கவனிப்பார்கள்.

  ,,,,,,,,,,,,,நம் ஒவ்வொருவருக்கும் சாதி, மத , இன, நிற, அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியன் எனும் உணர்வு கண்டிப்பாக விஞ்சி இருக்க வேண்டும்.,,,,,,,,,,

  கண்டிப்பாக இருக்க வேண்டும் தான்,,,

  ஒஒ அடுத்த ப்ரேக் டிபனா? சோடா போய் டிபன் ம்ம்,,,,,,

  தொடருங்கள், வாழ்த்துக்கள், காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியருக்கு,

   தொடர்ந்து என் பேச்சை கேடுகொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு பிரேக் கொடுக்கத்தான் இந்த இடைவெளி.

   செவிமடுப்பதற்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 4. ahaa mun thayaarippe illamal pesach sonnathum pesa aarampitha ningal evvalavu azakaa pesi irukkurirkal.
  adutha seythiyai vasikka aarvathudan. adutha pakuthiyai vasikkiren.

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்,

   வருகைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள். அந்த நேரத்தில் மனதில் உதித்த செய்திகள் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

   கோ

   Delete