பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி!!!

 பரந்த உள்ளங்கள் !!!


நிகழ்ச்சி - நெகிழ்ச்சி  மகிழ்ச்சியுடன்   தொடர்கிறது.... .

அப்படி அந்த இளைஞன் அந்த முதியவரிடம் என்ன கேட்டான்  ?


முதலில் இருந்து வாசிக்க நிகழ்ச்சி- நெகிழ்ச்சி  இங்கே தட்டுங்கள் திறக்கப்படும்.


இளைஞன் கேட்டான் .....

"ஐயா,உங்களின் இந்த பிளாஸ்டிக் பக்கெட்டை கொஞ்சம் தருகின்றீர்களா?"

எதற்கு ஏன் என்று ஏதும் கேட்க்காமல் தமக்கு உதவிய அந்த இளைஞனிடம் , "எடுத்துக்கொள்" என்று தன் கண்களால் சொல்கின்றார்.

 மகிழ்ச்சியோடு , அந்த அழுக்கேறிய பிளாஸ்டிக் பக்கெட்டை  இளைஞன் எடுத்துக்கொண்டு , அந்த முதியவரின் அருகில் , அதே தரையில் அமர்ந்து கொள்கிறான். ஏதும் புரியாத அந்த பெரியவர் அந்த இளைஞனை பார்க்கின்றார், அந்த இளைஞனோ அவரை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, "சிவமணியாக" தனது கரங்களால் அந்த பிளாஸ்டிக் பக்கெட்டை லாவகமாக தட்டி ஒரு முறையான இதமான இசையை எழுப்பிகின்றான்.

இப்போது அங்கே போகிறவர்களும் வருபவர்களும் இந்த இளைஞன் எழுப்பும் இசையினால் கவனம் ஈர்க்கப்பட்டு அங்கே கூடி நிற்கின்றனர், இப்போது அந்த இளைஞன் தனது தொப்பியை கழற்றி அதை திருப்பி ஒரு பாத்திரம் போல அந்த முதியவரின் அருகில் வைத்துவிட்டு தனது இசையை தொடர இப்போது அந்த தொப்பியில் சில சில்லறைகள் வந்து விழுகின்றன, முதியவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 

இப்படி அந்த இசை வழிந்துகொண்டிருந்த சமயத்தில் அதே இசையால் ஈர்க்கப்பட்டு  அங்கே கிட்டாருடன் (guitar) வந்த  ஒரு இளைஞன் தனது இசை கருவியை எடுத்து அந்த முதியவரின் அடுத்தபக்கத்தில் அவரருகில்  அமர்ந்து அந்த பிளாஸ்டிக் பக்கெட்டிலிருந்து வழியும் தாளத்திற்கு ஏற்ப ஒரு பாடலை மீட்டுகின்றான், கூட்டம் இன்னும் அதிகம் கூடுகின்றது, அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் இதற்கு முன் பரீட்ச்சயம் இல்லாதவர்கள் என்பது அவர்களின் பார்வையிலேயே தெரிகின்றது.

அந்த சமயத்தில் அங்கே கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண் கிட்டாரின் நரம்புகளில் இருந்து இறங்கி  வரும் ராகத்தின் பாடலை முன்பே அறிந்தவளாக அந்த பாடலை பாடிக்கொண்டே அதே தரையில் அந்த  முதியவரின் அருகில் அமர்ந்து மெய் மறந்து பாட ஆரம்பிக்கின்றாள்.

காலை  முதல் அந்த நேரம் வரை தன்னை யாருமே ஏறெடுத்து கூட பார்க்காத ஜனங்கள் இப்போது அங்கே அந்த முதியவரின் முன்னிலையில் நூற்றுக்கணக்காக கூடி அந்த இசை கச்சேரியை கைதட்டி ரசித்து கொண்டிருக்க , அங்கே இசைமட்டுமா வழிந்துகொண்டிருந்தது, அந்த முதல் இளைஞனின் தொப்பியும் தான் சில்லரைகளால்.

பாடல் முடிகிறது கூட்டம் கைதாட்டி தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவிட்டு, கலைகிறது.

இப்போது அந்த தொப்பிக்கு சொந்தகாரர் என்ன செய்தார் என்று நினைக்கின்றீர்கள்?    

ஆம் நீங்கள் நினைப்பது சரியே.

அந்த தொப்பியில் நிரம்பிய அத்தனை பணத்தையும் அந்த முதியவரின் பையிலே கொட்டிகொடுத்துவிட்டு , தலைக்கு குல்லா இல்லாமல் குளிரில் நடுக்கத்துடன் இருந்த அந்த முதியவரின் போர்வையை அவருக்கு சரி செய்து போர்த்திவிட்டு அந்த தொப்பியை அவரது தலையில் அணிவித்துவிட்டு ,மீண்டும் ஒரு புன்னகையை அவருக்கு செலுத்திவிட்டு அவரது நன்றியைகூட எதிர்பாராமல், அந்த சாலையை கடந்து எதிர் திசையில் சென்று மறைகின்றான், உடன் இசைத்தும் பாடியும் உதவிய அந்த இரண்டுபேர்களும்கூட யாதொரு எதிர்பார்ப்பும் பாராட்டும் அங்கீகாரமும் அகங்காரமும் இன்றி தமது திசைகளில் பயணிக்கின்றனர்.

நண்பர்களே, இந்த காட்ச்சியை கானொளியில் காணும்போது என் கண்கள் பனித்தன, நெஞ்சம் நெகிழ்ந்தது,உள்ளம் மகிழ்ந்தது.

இதுபோன்று நமக்கிருக்கும் எந்த திறமையும் அடுத்தவர் நலனுக்காக , அவர்களின் வறுமையை போக்க, அல்லது அவர்களது ஒரு வேளை உணவிற்க்காகவாவது வழி வகுக்குமெனில் சுற்றத்தை கண்டு வெட்கபடாமல், பிறரது பாராட்டையோ, அங்கீகாரத்தையோ கவன ஈர்ப்பையோ எதிர்பாராமல் உடனே முடிந்த  அளவிற்கு உதவுவது உண்மையிலேயே நமக்கு ஆத்ம திருத்தியையும் உதவி பெறுபவர்களுக்கு மன மகிழ்ச்சியையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை, எல்லாவற்றுக்கும்  மேலாக பிறருக்கு உதவிவிட்டோம் என்ற அகங்காரம் நம்மில் உருவானால் செய்த நன்மைக்கு அர்த்தமில்லை எனும் அர்த்தத்தையும் புரிந்துகொள்வது மனம் பக்குவபட்டதற்கான அடையாளம்.

அதே சமயத்தில் தெரு ஓரங்களில், ரோட்டோரங்களில் பிச்சை எடுத்துகொண்டிருக்கும் வயோதிகர்களை  உதாசீனம் செய்யாமல், அவர்களை கரிசனையோடு ஏறெடுத்து பார்த்து ஒரு புன்னகையோடு உதவுவது அவர்களைவிட ஒரு நிலையேனும்  உயர்வாய்  இருப்பதாக கருதுவோரின் மனிதாபிமான பொறுப்பும்  கடைமையுமாகும் என்று நான் கருதுகிறேன்.

இந்த பதிவு அந்த மூன்று பேருக்கு அந்த முதியவரின் சார்பாக நன்றி கூறி நிறைவு பெறுகிறது.

நன்றி!


மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. அருமையான நெகிழ்ச்சி.மனதை உருக்கும் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நெகிழ்வான பின்னூட்டம் எனக்கு மகிழ்வானதாக அமைந்தது.

      நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    ஆஹா உண்மையிலே இதை எதிர்பார்க்கல,
    மனம் நெகிழ்ந்து தான் போனது, எங்கள் நன்றியும் அவ் இளைஞர்களுக்கு,,,,
    நான் வேற நினைத்தேன்,,,,,,, அப்புறம் மொக்க வாங்கனுமே என்று,,,,,, அதான் அதற்கு என்றே தம்பி மகேஷ் இருக்கிறாரே என்று சொல்ல,,,,
    நல்ல பகிர்வு, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      நினைப்பதெல்லாம் நடக்கணும்னு நினைக்கிறது சரியில்லை.

      ஆமாம் நீங்க என்ன நினைத்தீர்கள் இப்பவாவது சொல்லலாமே.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. arumaiyaana nikazchiyai kanmun konduvanthuvittirkal sir!
    vazthukkal!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      தங்களின் புகழ் உலகெல்லாம் பரவி இருப்பது கண்டு மகிழ்ச்சிதான்.

      பேராசிரியரின் பின்னூட்டம் பார்த்தீர்களா?

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு