பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி !!

திறந்த வெளியில் .....!!!

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் நான் காண  நேர்ந்த  ஒரு நிகழ்ச்சி  மனதிற்கு நெகிழ்ச்சியாக  இருந்தது.

இதோ அந்த காட்சியின் நீட்சி உங்களுக்காக.

ஒரு பரபரப்பு மிகுந்த ஒரு பிரதானமான -  பிரமாண்டமான  நவ நாகரீக அடுக்கு மாடி அங்காடிகள் நிரம்பிய ஒரு பெரிய நகரத்தின் ஒரு கடைவீதி.

அங்கே சுமார் 60 வயதை கடந்த ஒரு மனிதர் அந்த கடை வீதின் நடை பாதையில், வாய் திறந்து கூட கேட்க்க முடியாத மன நிலையில் மிகவும் பரிதாபமாக அமர்ந்திருக்கின்றார்.

அவர் கண்டிப்பாக பிறரின் பண உதவியினை எதிர்பார்த்தே அங்கே அழுக்கான - கிழிந்த ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அவரின் உடைமைகளான, ஒரு பிளாஸ்டிக் பக்கட் , ஒரு கைத்தடி , ஒரு கிழிந்துபோன துணிப்பையோடு அந்த கடை வீதியில் போவோர் வருவோரை தமது கண்களால் பார்த்தும் தம் மனதினில் அவர்களது உதவியினை எதிர்பார்த்து, வாடிய முகத்துடனும் போர்வையால் மறைக்கப்பட்ட ஒட்டிய வயிறுடனும் (அப்படித்தான் இருக்கும்) வெகு நேரம் காத்திருக்கின்றார்.

எத்தனை நேரமாகியும் அந்த முதியவரை யாரும் கண்டுகொண்டதாகவோ, அவருக்கு உதவியதாகவோ தெரியவில்லை.

தமது அந்த அழுக்கு துணி பையை சுவருக்கும் அவருக்கும்   இடையில் வைத்து தமது கால்களை நீட்டி  சாய்ந்து அமர்ந்துகொண்டு மீண்டும் போவோர் வருவோரை ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்துக்கொண்டிருந்தார் யாரேனும் உதவ மாட்டார்களா  என காத்துக்கொண்டிருந்தார்.

காலையில் எத்தனை மணியில் இருந்து அங்கே இருக்கின்றார் என தெரியவில்லை,  ஆனால் இப்போது  காலை பதினோரு மணி.

காலைமுதல் அந்த நேரம் வரை குறைதபட்ச்சம் ஒரு இரண்டாயிரம் பேர்களாவது அவரின் இடது வலது பக்கமாக அவரை கடந்து சென்றிருப்பார்கள், எனினும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வர வில்லை.

இந்த நேரத்தில் அவர் அருகில் வந்த ஒரு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தனது பாக்கெட்டில் இருந்த மொத்த காசுகளான ஒரு பௌண்ட் நாணயத்தை அவருக்கு கொடுக்க, ஆவலுடன் பெற்றுகொண்டு அந்த இளைஞனை நன்றியோடு பார்க்க அந்த இளைஞனும் அங்கிருந்து சில அடிகள் தூரம் சென்றவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை  மீண்டும் அந்த முதியவரின் அருகில் வந்து அவரிடம் குனிந்து ஏதோ கேட்க்கிறான்.

அப்படி அந்த இளைஞன் அந்த முதியவரிடம் என்ன கேட்டிருப்பான் ?

நீங்களும் யோசித்து வையுங்கள் அப்படி அவன்  என்ன கேட்டிருப்பான் என்று., மீதத்தை நாளை தொடர்கிறேன்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

8 கருத்துகள்:

  1. 150 பதிவுக்கு வாழ்த்துகள் சார்.


    ம்ம்ம் அந்த இளைஞன் என்ன கேட்டிருப்பான் யோசிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அரசே,
    ஆஹா, பதிவு நெகிழ்ச்சி தான்,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அந்த இளைஞன் வாழ்க! ஒரு வேளை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டிருக்கலாம். இல்லை அவரது விவரங்களைக் கேட்டிருக்கலாம்...நீங்களே சொல்லிவிடுங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு