Followers

Wednesday, April 22, 2015

யார் யார் எங்கெங்கே?

நண்பனே! நண்பனே!! நண்பனே!!! 


நண்பர்களே,

ஏப்ரல் மாதம்  மாணவர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு மாதமாகும். இந்த மாதம் தான் அவர்கள் ஆண்டு முழுதும் கற்ற கல்வியின் நீல அகல ஆழ உயரங்களை, பரி மானங்களை  அளவிடும் அளவுகோலாக ஆண்டு தேர்வுகள் நடைபெறும் மாதம்.


இப்படி   ஆண்டு  தேர்வுகள் எழுதும் பள்ளி இறுதியாண்டு மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவ மாணவர்கள் இந்நாள் வரை தங்களோடு பல ஆண்டுகள் ஒன்றாக கல்வி பயின்று, இந்த இறுதி தேர்விற்க்குபிறகு மீண்டும் சந்தித்துக்கொள்ள வாய்ப்புகள் மிக குறைந்த அளவே இருக்கபோகும்  இந்த எஞ்சிய சில நாட்களுள் அவர்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் அபரிமித மான அன்பு பாசம், நட்பு பல ரூபங்களில் வெளிக்காட்டப்படும்.

சின்ன வயதில் நான் படித்த அந்த ஆரம்ப பாடசாலை ஒரு "மாதிரி" பள்ளி -  ("ஒருமாதிரி" பள்ளி அல்ல) "மாடல் ஸ்கூல்" அங்கே செகன்டரி கிரேட் ஆசிரியர் பயிற்சி பள்ளியும் இணைந்திருந்தது.

அதில் முதலாம்  மற்றும் இரண்டாம் ஆண்டு அண்ணன்மார்கள் மொத்தம் சுமார் 80 பேர்கள் பயின்று வந்தனர்.

இரண்டாம் ஆண்டு இறுதி தேர்விற்கு முன்னர் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கான ஆண்டு விழா நடத்துவார்கள் , மாலை சுமார் 6 மணிக்கு தொடங்கும் அந்த நிகழ்ச்சி இரவு 8 அல்லது 9 வரை நடைபெறும்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் எல்லா அண்ணன்களும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கதறி அழுவார்கள்.

Image result for pictures of students hugging each other during farewell

அப்போது எனக்கு இவர்கள் ஏன் இப்படி அழுகின்றார்கள் என்று புரியாது.

இப்படி ஐந்து ஆண்டுகள் நான் பார்த்த அந்த காட்சிகள் எனக்கு ஏதோ ஒரு விசித்திரமாக தோன்றியது.

இவர்கள் எல்லோரும் ஒரே ஹாஸ்டலில் தான் தங்கி இருக்கின்றனர், ஒரே பள்ளியில் தான் பயிலுகின்றனர், தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர், இன்று  மட்டும் ஏன் இப்படி கட்டிபிடித்து கதறி அழுகின்றனர்?

விடை தெரியாத அந்த விந்தை   செயலுக்கான விடை நான் பள்ளி இறுதி ஆண்டு முடித்து கல்லூரிக்கு சென்ற அந்த தருணத்தில் தான் கிடைத்தது.

ஆம் நம்மோடு கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக பயின்ற எத்தனையோ மாணவ நண்பர்களை அதற்க்கு பின்னர் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போனதே.

இதற்க்காகத்தான அன்று அந்த அண்ணன்மார்கள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து தங்கள் அன்பை பரிமாறிகொண்டனரோ?

Image result for pictures of students hugging each other during farewell

இன்றும் நான் என்னோடு பயின்ற எத்தனையோ என் நண்பர்களை அவ்வப்போது நினைத்து அழுவதுண்டு.

அவ்வரிசையில் மேனிலை பள்ளி முதலாமாண்டு தேர்விற்க்குபிறகு வந்த கோடை விடுமுறையில் பக்கத்து வயலில் இருந்த பெரிய கிணற்றில் நீந்திகுளிக்க சென்ற என் இனிய நண்பன் ஆர்.செல்வராஜ்,  அதற்க்கு முன் இரவு பெய்த புயல் மழையில் மின்சார கம்பிகள் அறுந்து  விழுந்து மின்சாரம் பாய்ந்து இருந்ததை அறியாதவனாக  அந்த கிணற்றில் குதித்து பெரிய விபத்துக்குள்ளாகி மறித்து போனதை, அவனது இறுதி யாத்திரையில் இடுகாடுவரை நடந்து சென்றதை  , மீண்டும் பள்ளி திறந்தபோது  மேனிலை இரண்டாம் ஆண்டு வகுப்பில் அவன் இல்லாமல் இருந்ததையும் நினைத்து இன்றும் கண்ணீர் உகுக்கும் இரவுகள் உண்டு.

இப்படி மட்டுமல்லாமல், வெளி ஊர்களில், அல்லது வேற்று மாநிலங்களில் வேலை , படிப்பு , குடும்ப இடபெயர்ச்சி போன்ற காரணங்களுக்காக தூரமாக சென்று கடைசிவரை மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பமே ஏற்படாமல் போய்விடுமோ என்று எண்ணி தான் அன்று அந்த அண்ணன்கள் அழுதார்கள் என்பது எனக்கு கொஞ்சம் காலதாமதமாகத்தான் புரிந்தது, என்னே ஒரு நட்பு?

இதே போன்றதொரு பிரிவு உபச்சார நிகழ்ச்சியை கல்லூரி முதுகலை  சீனியர் மாணவர்களுக்காக முன்னின்று ஏற்பாடு செய்த அந்த நிகழ்வினை வேறொரு நாள்  சொல்கிறேன்.

அதுவரை உங்களோடு பயின்று அதற்க்கு பின்னர் இதுவரை பார்க்க பேச தொடர்புகொள்ளமுடியாமல் போன உங்கள் நண்பர்களை எண்ணி  நினைவுகளை அசைபோடுங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

5 comments:

 1. பிரிதல் சோகம்தானே
  ஆனாலும் நினைவலைகள் நம் வாழநாள் முழுதும் சுகம் தரும்

  ReplyDelete
 2. இனிய நினைவுகள் மனதில் வந்தன...

  ReplyDelete
 3. ஆம் நண்பரே! இந்த அழுகை எல்லாம் நாங்களும் அழுததுண்டு. அந்தக் கடைசி தினம்...சோசியல் டே என்று கொண்டாடி, பசுமை நிறைந்த நினைவுகளே என்று பாடல் எல்லாம் பாடி ...அழுது...ஆட்டோ க்ராஃப் எழுதிக் கொடுத்து..என்று ...இப்போதும் அந்த ஆட்டோ கிராஃப் இருக்கின்றது.....

  பார்க்க முடியாத நண்பர்களையும் நினைத்து அசைபோடுவது மட்டுமல்லாமல் தேடிக் கொண்டும் இருக்கின்றோம்....

  ReplyDelete
 4. இனிய நினைவுகள்,
  தங்கள் பதிவும்,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி .

   கோ

   Delete