பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ஆத்தா..... நான் பாஸாயிட்டேன்!!!

சந்தைக்கு போவனும்….
நண்பர்களே,
தலைப்பையும் உப தலைப்பையும் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வரும் மயிலையும் சப்பாணியையும்  மறக்கமுடியுமா?

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

என்ன விலை அழகே?

பேரின்ப அதிர்ச்சி!!!??? 
நண்பர்களே,
கடந்த சில நாட்களுக்கு முன் மகாத்மா காந்தியின் கண்ணாடி பற்றிய பதிவு ஒன்றை எழுதி இருந்தேன் , மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள "கதவிற்கு முன்னாடி காத்திருந்த கண்ணாடி" வாசிக்கவும்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

"வாரு பத்து கூறு பத்து தக்காளி பத்து"

English version

நண்பர்களே,

சின்ன வயதில் அம்மாவுடன் காய்கறி அங்காடிக்கு சென்றபோது என் காதுகளில் ஒலித்த வாக்கியம்தான் இன்றைய பதிவின் தலைப்பு.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தேசிய கொடி ஏற்றும் தகுதி.

யாருக்கு?
நண்பர்களே,
தேசிய கொடி என்பது ஒவ்வொரு தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல அது அந்தந்த தேசத்தின் கவுரவம் மற்றும் உயிரினும் மேலான பொக்கிஷம்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒட்டும் உறவும்.!!

கொரோனா பழம்!!
நண்பர்களே,


உறவாக இருந்து வாழ்ந்துவரும்   இருவருக்கிடையில் சண்டையோ மன கசப்போ ஏற்பட்டால் அவர்கள் சொல்லிக்கொள்வது இனி நமக்குள் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதே.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

"இரவல் வாங்கவில்லையே"

 நண்பர்களே,


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

"பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கெல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.

Image result for image of indian flag

எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?"

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.
நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

கதவிற்கு முன்னாடி...

காத்திருந்த கண்ணாடி!!
நண்பர்களே,


சாதாரண ஆத்துமாக்கள் முதல் மகாத்மாக்கள் வரை உலகிலுள்ள மனிதர்களுள் குறைந்த பட்சம் 60% மக்கள் தூர / கிட்ட  பார்வைக்காக கண்ணாடி அணியும் கட்டாயத்தில் இருப்பாகாக, National Health Interview Survey, 2016  சொல்கிறது.